Vijayakanth should recover completely

விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அரசியல்

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நவம்பர் 18 ஆம் தேதி தேமுதிக நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஜயகாந்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை சீராக உள்ளது. சில நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்புவார் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுகிறது” என்று தெரிவித்திருந்தது.

இது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரை விஜயகாந்த் உடல்நிலை குறித்து விசாரித்ததோடு, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், அன்பு சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் விரைவில் வடிந்துவிடும்: ராதாகிருஷ்ணன்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *