தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் இன்று (டிசம்பர் 29) வைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். நேற்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேற்று விஜயகாந்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நேரம் செல்ல செல்ல விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டனர். ஆனால் தேமுதிக அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட உள்ளது என்பதை அறிந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் முன்கூட்டியே அங்கு குவிந்தனர். தொடர்ந்து காலை 6 மணி முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறனர்.
இன்று மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். பின்னர் மதியம் 1 மணிக்கு விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கி பூவிருந்தவல்லி சாலை வழியாக தேமுதிக அலுவலகத்தை சென்றடைய உள்ளது. தொடர்ந்து இன்று மாலை தேமுதிக அலுவலகத்தில் விஜய்காந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
இயல்பு நிலைக்குத் திரும்பிய கோவில்பட்டி: ரூ.100 கோடி தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி!