தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்று சென்னை மியாட் மருத்துவமனை இன்று (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 18-ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் நவம்பர் 23-ஆம் தேதி மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில், “விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. சில நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சனாதன விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
சுரங்க விபத்து: மீட்பு பணியில் கைகொடுத்த திருச்செங்கோடு ரிக் இயந்திரம்!