மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வரும் ஜனவரி 24 ஆம் தேதி படத்திறப்பு நினைவேந்தல் நடைபெறும் என இன்று (ஜனவரி 18) அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாள் முதல் தற்போது வரை திரை பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் நேரில் சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி படத்திறப்பு நினைவேந்தல் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது.
இது குறித்து தேமுதிக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், விஜயகாந்த் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சரவெடி வெடித்து கொண்டாடிய விஷ்ணு… உண்மையான காரணம் இதுதான்!
இளைஞரணி மாநாடு இந்தியாவின் மாநாடு: ஸ்டாலின்