சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று (டிசம்பர் 11) வீடு திரும்பினார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 18-ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், நவம்பர் 29-ஆம் தேதி விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரேமலதா விஜயகாந்த் பகிர்ந்திருந்தார்.
இந்தநிலையில், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் வீடு திரும்பினார் என்று மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் இன்று பள்ளிகள் திறப்பு!
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!