ரிப்பன் பில்டிங்கை கடப்பதற்குள்… விஜயகாந்துக்கு சென்னை மாநகராட்சி செய்த கௌரவம்!

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 29) அடக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சொந்த இடத்தில் இறந்தவரை அடக்கம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து  சொந்த இடத்தில் கேப்டன் உடல் அடக்கம் – சட்ட சிக்கலா? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் நீதிமன்ற தீர்ப்புகளையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதலோடு விஜயகாந்த் உடலை அடக்கம் செய்யலாம் என்றும் மேற்கோள் காட்டியிருந்தோம்.

அதன்படியே இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்ய ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்: மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

குறிப்பாக, ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரமும் சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், டிசம்பர் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் இன்று (டிசம்பர் 29) காலை 10 மணிக்கு துவங்கியது.

மாமன்ற கூட்டத்தில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த்துக்கு இரங்கல் மற்றும் அவரது உடலை  தனியார் இடமான  தேமுதிக அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்வதற்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட 39 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.

வழக்கமாக பிற்பகல் 3.30 மணிக்கு தான் மாமன்ற கூட்டமானது நிறைவடையும். ஆனால் இன்று சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம்  ரிப்பன் பில்டிங்கை கடப்பதற்குள்   கூட்டத்தை நிறைவு செய்து அவருக்கு கௌரவம் அளிக்க வேண்டும் என்று கருதிய மேயர் பிரியா…  கூட்டத்தை  மதியம் 1.30 மணிக்கெல்லாம்  முடித்துவிட்டார்.

இதனால் 7 கவுன்சிலர்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்களிடம் அடுத்த மாமன்ற கூட்டத்தொடரின் போது பேச வாய்ப்பளிக்கப்படும் என்று   மேயர் பிரியா உறுதியளித்தார்.

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்  சென்னை மாநகராட்சி அலுவலகத்தை கடப்பதற்கு முன்பாகவே அவரது உடலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கான ஒப்புதல் தீர்மானம் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை பல வகைகளிலும் கெளரவமாக நடத்த முழு ஏற்பாடுகளையும் செய்த முதல்வர் ஸ்டாலின், மாநகராட்சி மூலமாகவும் அதனை  செய்துள்ளார் என்று கட்சி பேதமின்றி சொல்கிறார்கள் கவுன்சிலர்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் சென்னை மாநகராட்சியில் தேமுதிகவுக்கு ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்பது தான்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தீவுத் திடலில் தவித்த நிர்மலா சீதாராமன்… காரணம் என்ன?

அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts