தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தொண்டர்களை காண காரில் வருகை புரிந்த விஜயகாந்தை அவரது தொண்டர்கள் உற்சாக கோசத்துடன் வரவேற்றனர்.
‘கேப்டன் வாழ்க’ என பிறந்தநாள் வாழ்த்துக்களை எழுப்ப விஜயகாந்த் அனைவருக்கும் கையசைத்து நன்றி தெரிவித்ததுடன் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக அனைத்து தொண்டர்களையும் விஜயகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விஜயகாந்தின் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்த வருடமும் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்.
- க.சீனிவாசன்
“வானத்தைப் போல” பரந்த மனது: விஜயகாந்த்துக்குத் தலைவர்கள் வாழ்த்து!