“வானத்தைப் போல” பரந்த மனது: விஜயகாந்த்துக்குத் தலைவர்கள் வாழ்த்து!

அரசியல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 25). இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேமுதிகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கோயில்களில் பூஜை செய்வது எனக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்த்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின்

vijayakant birthday stalin wishes


என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல் நலம் பெற்று – துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

vijayakant birthday stalin wishes


“வானத்தைப் போல” பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், “மரியாதை”யையும் பெற்று “புலன் விசாரணை” செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் “சகாப்தமாக” “கேப்டனாக” “மரியாதை”யுடன் “நெறஞ்ச மனசு”டன் வலம் வந்து கொண்டிருக்கும் விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

vijayakant birthday stalin wishes


இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,
அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

vijayakant birthday stalin wishes

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
70வது பிறந்தநாள் காணும் தே.மு.தி.க நிறுவனத் தலைவர், நண்பர் கேப்டன் விஜயகாந்த்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணியாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பிரியா

ஆக்சன் ஹீரோ அதிரடி அரசியல்வாதி : மீண்டும் கர்ஜிப்பாரா விஜயகாந்த்?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *