காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவாகவும் இருந்த விஜயதரணி, பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளியானது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் அவர் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டிருந்தார்.
இந்தநிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு விஜயதரணி கடிதம் அனுப்பியிருந்தார்.
பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து கட்சி தாவல் தடைச் சட்டத்தின் படி, விஜயதரணியை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகர் அப்பாவுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்தநிலையில், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவுக்கு விஜயதரணி நேற்று (பிப்ரவரி 24) கடிதம் அனுப்பியுள்ளார்.
விஜயதரணி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதால், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பவுலிங்கில் மிரட்டிய ஷோபனா ஆஷா: RCB கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!