அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (செப்டம்பர் 18) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கண்ணதாசன் இலக்கிய விழாவில் பங்கேற்றார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், “தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் என்ன மாதிரியான காய்ச்சல் பரவுகிறது, அதற்கு நாம் எந்த மாதிரியான முன்னேற்பாடுகள் அமைக்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு, வல்லுநர் குழு அமைக்க வேண்டும்.

மருந்து தட்டுப்பாடு தமிழகத்தில் இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பதை விடுத்துவிட்டு, அதனைச் சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும்.
என்னுடைய தொகுதியில் சில பஞ்சாயத்துகளில் அதிக பேருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு காய்ச்சல் பாதிப்பை அக்கறையோடு அணுக வேண்டும். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு, இன்புளுயன்சா, ப்ளூ, காய்ச்சல்கள் அதிகளவில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை மர்மக் காய்ச்சல் என்று ஒரு வார்த்தையில் கடந்து விட முடியாது.

அரசு மருத்துவமனையில், கூடுதலாக மருத்துவக் குழுவை அமைத்து, படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் காய்ச்சல் பாதிப்பினால் ஏற்பட்ட பதட்டத்தைத் தணிக்க வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும்.
குறிப்பாக குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகளை அமைத்து, 24 மணி நேரமும் அந்த வார்டில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
செல்வம்
சிறுவர்கள் மீதான தீண்டாமை : கைதானவர்கள் ஊருக்குள் வர தடை!
பிரகாஷ் ராஜின் லவ் வீடியோ: த்ரிஷாவின் க்யூட் ரியாக்ஷன்!