முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு அக்டோபர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2016-21 அதிமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை 2021-ஆம் ஆண்டு சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அக்டோபர் 17-ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன், காவல் ஆய்வாளர் ஜவஹர் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பூரண ஜெயந்தி முன்பாக இன்று ஆஜரானார்கள்.
விடுபட்ட குற்றப்பத்திரிகை நகல்கள் விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 30-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா கூட்டணி பாஜகவுக்கு மிகவும் சவாலாக இருக்கும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சுப்மன் கில் உடல்நிலை: ராகுல் டிராவிட் முக்கிய தகவல்!