முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் இன்று (நவம்பர் 15) ஒத்திவைத்துள்ளது.
2016-2021 அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை 2021-ஆம் ஆண்டு சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இதுவரை 5 முறை விசாரணைக்கு வந்துள்ளது. இன்றைய விசாரணையின் போது விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. விஜயபாஸ்கர் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதி பூரண ஜெய ஆனந்த டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!
சங்கரய்யா மறைவு: தலைவர்கள் இரங்கல்!