டிசம்பர் 15ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
தமிழகம் முழுவதிலும் இருந்தும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்காக இரண்டு நாட்கள் முன்னால் இருந்து நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினர்களும் சென்னைக்கு வந்துவிட்டனர்.
அதேபோலத்தான் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும் முன்கூட்டியே சென்னை வந்துவிட்டார். எனினும் பொதுக்குழுவுக்கு முதல் நாள் டிசம்பர் 14ஆம் தேதி இரவு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
னவே தலைமை கழக நிர்வாகிகளில் ஒருவரான பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்றைய அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை.

கட்சியின் வரவு செலவு- கட்சி வங்கிக் கணக்கில் இருப்பு உள்ளது எவ்வளவு என்பது உள்ளிட்ட ஆண்டு அறிக்கை விவரங்களை ஒவ்வொரு பொதுக்குழுவிலும் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்பு கட்சியின் பொருளாளர் சமர்ப்பிக்க வேண்டும். இது அனைத்து கட்சிகளிலும் இருக்கிற நடைமுறை.
இந்த வகையில் நேற்று அதிமுக பொதுக்குழுவில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்க இயலாததால் அவருக்கு பதிலாக ஆண்டு அறிக்கையை முன்னாள் அமைச்சரான புதுக்கோட்டை விஜயபாஸ்கர் வாசித்தார்.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “சாதாரணமான நடைமுறைதான் இது. ஆனாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பதிலாக யார் ஆண்டு அறிக்கையை வாசிப்பது என்கிற எதிர்பார்ப்பு முதல் நாள் இரவில் இருந்தே கட்சி நிர்வாகிகளுக்குள் இருந்தது.
பொதுக்குழு மேடையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆண்டு அறிக்கை வாசிக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒப்படைத்தார்.
இது ஏதோ திடீரென ஒருவருக்கு பதில் இன்னொருவரை மாற்றி வாசிக்க வைக்கிற விஷயம் இல்லை. விஜயபாஸ்கரை தான் கட்சியின் அடுத்த பொருளாளராக கொண்டுவரும் எண்ணத்தில் இருக்கிறார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயது ஆகிவிட்டதால் அவர் கட்சியின் பொருளாளர் என்ற சுமை மிகுந்த பொறுப்பை கவனிக்க இயலவில்லை. எனவே முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்த விஜயபாஸ்கரிடமே பொருளாளர் பதவியை ஒப்படைக்கலாம் என்ற எண்ணம் எடப்பாடியிடம் இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத் தான் நேற்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஆண்டு அறிக்கை வாசிக்கும் பொறுப்பை விஜயபாஸ்கரிடம் ஒப்படைத்தார் எடப்பாடி.
இதில் இன்னொரு விசேஷமும் இருக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கான கணிசமான செலவுகளை டாக்டர் விஜயபாஸ்கர் ஏற்றிருக்கிறார் என்பதும் ஒரு காரணம்” என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
– வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அர்த்த மண்டபத்தில் நுழைந்த இளையராஜா… தடுத்த ஜீயர்கள் : நடந்தது என்ன?
ஜாஹீர் ஹுசைன் காலமானார்… உறுதி செய்த குடும்பத்தினர்!
”ஆதவ் அர்ஜுனா விலக வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல” : திருமா