அவதூறு வழக்கு: விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

அரசியல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கேரளாவை சேர்ந்த ஷர்மிளா ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 10) உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு எதிராக கேரளாவை சேர்ந்த ஷர்மிளா திருநெல்வேலி காவல் ஆணையரிடம் புகாரளித்தார்.

அதில், “விஜயபாஸ்கர் தன்னிடம் ரூ.14 கோடி பணம் வாங்கிவிட்டு ரூ.3 கோடியை திருப்பி செலுத்தினார். மீதமுள்ள பணத்தை தராமல் மிரட்டல் விடுக்கிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். மேலும் ஷர்மிளா இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கங்களிலும் கருத்து பதிவிட்டு வந்தார்.

இதனால் ஷர்மிளாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, “அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர். கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றினார். அவர் மீது அவதூறு பரப்புவது தவறானது. விஜயபாஸ்கருக்கு எதிராக ஷர்மிளா வெளியிட்ட சமூக வலைதள பதிவுகளை நீக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கர்நாடக பாஜக மாநில தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்!

ராஷ்மிகா டீப்ஃபேக் வீடியோ: காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *