திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… விஜய் கைப்பட எழுதிய கடிதம்!

Published On:

| By Selvam

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஆளும் திமுக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன் என்று தவெக தலைவர் விஜய் தனது கைப்பட கடிதம் ஒன்றை இன்று (டிசம்பர் 30) எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “அன்பு தங்கைகளே, கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் தாய்மார்கள், தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் ‘சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும், சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம். அண்ணனாகவும், அரணாகவும் எல்லா சூழ்நிலைகளிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்.

எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

போலீசாரை டென்ஷனாக்கிய அதிமுகவின் ‘யார் அந்த சார்?’ போஸ்டர்!

19,000 ஊழியர்களுக்கு BSNL விருப்ப ஓய்வு? – காரணம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share