234 தொகுதிகளிலும்… விஜய்யின் அடுத்த மூவ்!

அரசியல்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28ஆம் தேதி 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய், அரசியலுக்கு வருவதற்கான அடித்தளங்களை பலமாக்கி வருகிறார். அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாளில் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது மற்றும் இரத்த தானம் , அன்னதானம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தனது இயக்கம் மூலம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வரும் 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “உலகம் முழுவதும் மே 28ஆம் தேதி அன்று உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 12 மற்றும் 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற சுமார் 1500 மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் ஜூன் மாதத்தில் சந்தித்து நிதியுதவி வழங்க உள்ளார்.
பிரியா

நேருவின் செங்கோலும் மோடியின் செங்கோலும்!

“காவல்துறையில் காலிப்பணியிடங்கள் இல்லை”: சைலேந்திரபாபு

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “234 தொகுதிகளிலும்… விஜய்யின் அடுத்த மூவ்!

  1. 2000 ரூபாய் நோட்டு அதிகமாக இருக்குமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *