தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், தற்போது அக்கொடி எந்த நிறத்தில் இருக்கும் என்ற சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி என்று ரசிகர்களால் அழைக்கக்கூடிய பிரபல நடிகர் விஜய் தனது நற்பணி மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதிகாரப்பூர்வமாக ’தமிழக வெற்றிக் கழகம் கட்சி’ பெயரை கடந்த பிப்ரவரியில் அறிவித்தார்.
கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
மாநாட்டுக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில முதல்வர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளார் விஜய். முறையாக அழைப்பு கொடுப்பதற்கு முன்பு நான்கு முதல்வரிடமும் பேசப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
மாநாட்டுக்கு முன்பாக ஈசிஆர் சாலையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார்.
இதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பார்கள் என 300 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொடியின் வர்ணங்கள் பற்றி தவெக நிர்வாகியிடம் விசாரித்தோம்.
அதற்கு, “மஞ்சள், வெள்ளை, சிவப்பு என மூவர்ண நிறத்தின் மத்தியில் வாகை பூ பதிக்கப்பட்டுள்ளது.
வாகை பூ வெற்றியை உணர்த்தும். சங்ககாலத்தில் போரில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு வாகை பூக்களை சூடுவார்கள்.
அந்த வகையில் மூவர்ண கொடியில் வாகை பூ பதிக்கப்பட்டுள்ளது. இனி எங்கள் பயணம் வெற்றியை நோக்கிதான்” என்கிறார் தவெக நிர்வாகி ஒருவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி
ராஜீவ்காந்தி பிறந்தநாள் : நினைவிடத்தில் ராகுல் மரியாதை!
சரிந்த தங்கம் விலை…எவ்வளவு குறைந்தது?
கட்டி பிடிக்கும் சீனில் வேண்டுமென்றே 17 டேக்… மலையாள நடிகர் மீது ஹேமா கமிஷனில் நடிகை கண்ணீர்!