தவெக மாநாடு : வி.சாலையில் குவியும் கூட்டம்!

Published On:

| By Kavi

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று(அக்டோபர் 27) நடைபெறவிருக்கும் நிலையில் விக்கிரவாண்டி விசாலையில் தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் விக்கிரவாண்டி விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கிறது.

புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் இன்று முதல் மாநாட்டை நடத்துகிறார். இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகளிலும், கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் தொண்டர்கள் வி.சாலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகளவு வந்துகொண்டிருக்கின்றனர்.

நேற்று இரவு முதலே மாநாட்டு திடலில் ரசிகர்கள் கூட்டத்தையும் தொண்டர்கள் கூட்டத்தையும் காணமுடிந்தது.

இன்று காலை நான்கு மணி முதல் மீண்டும்  கூட்டம் வர தொடங்கியது.  தற்போது வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வருகின்றன.

விக்கிரவாண்டி சுற்றுப்பகுதிகளில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், மயிலம், பாண்டிச்சேரி, செஞ்சியில் ஹோட்டல் அறைகளும் நிரம்பி வழிகின்றன.  உணவங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

கூட்டம் அதிகரித்த வண்ணம் இருப்பதால் காலையிலேயே மாநாட்டுத் திடலுக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டுள்ளனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரிப்பதையும் காண முடிகிறது.

மாநாட்டுக்கு வருபவர்களுக்கு வழங்குவதற்காக தண்ணீர் பாட்டில் மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை வி.சாலை பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபட்ட பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டுத் திடலுக்கு வருகைத்தந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விஜய் ‘பஞ்ச்’களில் தெறித்த அரசியல்!

ஹெல்த் டிப்ஸ்: ரத்தச்சோகைக்கு உதவும் சித்த மருத்துவம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share