கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி விஜய் தனது புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அவரது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தனது அரசியல் பிரேவசத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்,
அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
வழக்கமாக தனது ரசிகர்களை “என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பி…” என்ற அடைமொழியுடன் குறிப்பிடும் விஜய், தற்போது அரசியல் கட்சி துவங்கிய நிலையில் “தோழர்கள்” என்று அடையாளப்படுத்தியுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…