நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை அறிவித்து தனது கட்சி கொடியினையும் அறிமுகம் செய்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. அதைச் சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணையம் பரிசீலித்துள்ளதாக கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி விஜய் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் தவெக பதிவு செய்யப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு பின் பதிவுக்காக விண்ணப்பித்திருந்த 39 கட்சிகள் பதிவு செய்யப்பட்டதாக இன்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தின் முகவரியில் தவெக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு தவெகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் முதல்முறையாக அரசியல் மாநாட்டை நடத்துகிறார். இதற்கான இறுதிக்கட்டபணிகள் நடந்து வருகின்றன.
மாநாடு அன்று விஜய் ஏற்றுவதற்காக 100 அடியில் கொடிக்கம்பம் இன்று நடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகவெற்றிக்கழகம் என்ற ஹேஷ்டேக்கை இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இர்பான் படிக்கணும் … ஷாலினி பிரசவத்தின் போது அஜித் குமார் செய்த காரியம் தெரியுமா?
விஜய் மாநாடு… மிரட்டும் டிராபிக்… மாறும் ரூட்டுகள்!