தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது, “அரசியல் ஒன்றும் சினி ஃபீல்டு இல்லை. பேட்டில் ஃபீல்ட். அதனால் சீரியசோடும் கொஞ்சம் சிரிப்போடும் சேர்ந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்பாட்டில் இறங்கினால் மட்டும் தான் இந்த ஃபீல்டில் தாக்குப்பிடிக்க முடியும். கவனமாகத்தான் களமாட வேண்டும்.
சயின்ஸ் அண்ட் டெக்னாஜி மட்டும் தான் டெவலப் ஆகனுமா? ஏன் பாலிடிக்ஸ் டெவலப் ஆகக்கூடாதா? இங்க ஆல்ரெடி இருக்கிற அரசியல்வாதிகளைப் பற்றி அதிகமாக பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. அதுக்காக மொத்தமா கண்ண மூடிக்கிட்டு இருக்கப்போறதும் இல்ல.
தந்தை பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை.
அறிஞர் அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. ஆனாலும் பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி என பெரியார் சொன்ன இவற்றை நாங்கள் முன்னெடுப்போம்” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுரையில் தலைமைச் செயலக கிளை, ஆளுநர் வேண்டாம்: தவெக செயல்திட்டம்!
இருமொழிக் கொள்கை, தமிழ் ஆட்சிமொழி: தவெக கொள்கை அறிவிப்பு!