தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது, “நாம கட்சியை அறிவித்தபோதே நம்முடைய எதிரிகள் யார் என்பதை டிக்ளேர் செய்துவிட்டோம். மக்களை மதம், சாதி, இனம், மொழி, பாலினம் என பிரித்து ஆட்சி செய்யும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் மட்டும் தான் நமக்கு எதிரியா?
நமக்கு இன்னொரு கோட்பாடும் உள்ளது. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பது. ஊழல் வைரஸ் மாதிரி பரவிக்கிடக்கிறது. இந்த பிளவுவாத சக்திகளைக் கூட நாம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இந்த கரப்ஷன் எப்படி ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கவே முடியாது.
கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும் கலாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும். அதுக்கு முகமே இருக்காது. முகமூடி தான் முகமே. அப்படி முகமூடி போட்ட கரப்ஷன் கபடதாரிகள் தான் இப்போது நம்மை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத அரசியல். நம்முடைய மற்றொரு எதிரி இந்த கரப்ஷன் கபடதாரிகள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடவுள் நம்பிக்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல: தவெக மாநாட்டில் விஜய்
மதுரையில் தலைமைச் செயலக கிளை, ஆளுநர் வேண்டாம்: தவெக செயல்திட்டம்!