தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது, “மக்களின் ஆசீர்வாதத்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் நம்மை சிங்கிள் மெஜாரிட்டியில் ஜெயிக்க வைப்பார்கள் என்ற அசைக்க முடியாத, ஆழமான நம்பிக்கை 100 சதவிகிதம் இருக்கிறது.
நாம் மெஜாரிட்டியில் வெற்றி பெற்றாலும், நம் செயல்பாட்டை நம்பி நம்மோடு சில பேர் வரலாம். அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம். அப்படி வருபவர்களை நாம் அன்போடு அரவணைக்க வேண்டும்.
அதனால் நம்மை நம்பி களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். 2026-ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
கேப்டனை முதல் ஆளாக சென்னை எடுக்காது… பின்னணி என்ன தெரியமா?
“மக்கள் விரோத ஆட்சியே திராவிட மாடல் ஆட்சி” – திமுகவை விமர்சித்த விஜய்