நாளை மாநாடு : இன்று விஜய் முக்கிய கோரிக்கை!

Published On:

| By Kavi

தவெக மாநாட்டுக்கு வருபவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக வர வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

விக்கிரவாண்டியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலையில் நாளை தவெக மாநாடு நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

மாநாட்டுக்கு குதிரை வண்டி, இரு சக்கர வாகனம், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து விஜய் ஆதரவாளர்களும், ரசிகர்களும் புறப்பட்டுள்ளனர்.

சென்னை அம்பத்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் 100 பேருந்துகள் மற்றும் 40 கார்களில் செல்லவுள்ளனர்.

நெல்லை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் புல்லட் ராஜா தலைமையில், குதிரை வண்டியில் தவெக தொண்டர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுக்காப்பாக வர வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 26) தனது எக்ஸ் பக்கத்தில்,  “சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.

ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்.

போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கான தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் மாநாடு… மிரட்டும் டிராபிக்… மாறும் ரூட்டுகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மதுரையில் பேய் மழை – தவிக்கும் மக்கள் : ஆட்சியருக்கு ஸ்டாலின் உத்தரவு!

விமர்சனம் : பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share