தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை அக்டோபர் 27 இல் நடத்திய கட்சியின் தலைவர் விஜய், தற்போது மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமனங்கள் பற்றிய ஆலோசனையில் இருக்கிறார்.
மாநாட்டில் திமுக மீதான அவரது தாக்குதலையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் விஜய் மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
திமுக என்பது ஒரு ஆலமரம், அதை அழிக்க சிலர் பிளேடுகளை எடுத்து வருகிறார்கள் என்று உதயநிதி பெயர் குறிப்பிடாமல் விஜய்யை விமர்சித்தார்.
இதற்கிடையில் திமுக அரசின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த முடிவு செய்திருக்கிறார் விஜய்.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் அரசின் செயல்பாடுகள் குறித்து தரவுகளோடு, விரிவான மனுவை தயார் செய்து அதை ஆளுநரிடம் அளிப்பதற்கு விஜய் கட்சி சார்பில் ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
விக்கிரவாண்டி மாநாட்டில் ஆளுநர் பதவியை அகற்றுவோம் என்று அறிவித்த விஜய்… ஆளுநரிடம் மனு அளிப்பது சரியாக இருக்குமா என்றும் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், ஆளுநர் பதவியை அகற்றுவது என்பது கொள்கை முடிவு. அதே நேரம் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அரசுக்கு எதிரான புகார்களை அதிகாரபூர்வமாக அளிப்பதற்கு ஆளுநர் மாளிகை பொருத்தமானதாக இருக்கும் எனவும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டால்… விரைவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கட்சி வட்டாரங்களில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
கையில் டேட்டாவுடன் கேள்விகளை அடுக்கிய ஸ்டாலின்.. ஷாக் ஆன திமுக நிர்வாகிகள்!
”எதிர்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார்” : ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை!