நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், இன்று (ஆகஸ்ட் 22), சென்னை பனையூரில் உள்ள அவரின் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இதுகுறித்து அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ்நாடு அமைச்சர்களிடமும் பல்வேறு இடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்த போது விஜய் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர்கள்,
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்
இது ஜனநாயக நாடு. இந்த நாட்டில் அனைவருக்கும் கட்சி தொடங்கவும், கொடியை அறிமுகப்படுத்தவும், அந்தக் கொடியை ஏற்றவும் உரிமை உண்டு.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
8 கோடி மக்கள் இருக்கிற இடத்தில் எத்தனை கட்சி வேண்டுமானாலும் வந்து கொண்டே இருக்கும்.
உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
அரசியல் கட்சி தொடங்குவது அனைவருக்குமான உரிமை… அந்த வகையில் அவர் தொடங்கியிருக்கிறார். போக போக அவரது கொள்கை என்னவென்று பார்ப்போம்.
விளையாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலின்
விஜய் நிகழ்ச்சியை பார்க்கவில்லையே… பார்த்துவிட்டு சொல்கிறேன். அவருக்கு வாழ்த்துகள்.
வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி
விஜய் கட்சிக் கொடி பறந்தால் பார்த்துவிட்டு சொல்கிறேன். யாரையும் நாங்கள் டிஸ்கரேஜ் செய்யவில்லை. அவர் கட்சி ஆரம்பித்து கொடியை அறிமுகம் செய்தால் அதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. அவரால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
செந்தில் பாலாஜி வழக்கு : தனியார் வங்கி மேலாளரிடம் குறுக்கு விசாரணை!
டிஜிட்டல் திண்ணை: இரண்டரை மணி நேர புயல்… திக்குமுக்காடிய அமைச்சர்கள்… ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!