பரந்தூர் நோக்கி வரும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஜனவரி 20) அங்குள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் சந்திக்கிறார். இதற்காக காலை 7.30 மணியளவில் பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டார்.
விஜய் பரந்தூர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பரந்தூர் நோக்கி கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் படையெடுத்தனர்.
அவர்களை பொன்னேரிக்கரை, கண்ணந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடுத்து நிறுத்தினர். திருமண மண்டபத்தை சுற்றி முதலில் 200 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால், கூடுதலாக 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பரந்தூர், ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் ஆகிய 13 கிராம மக்கள் மட்டுமே விஜய்யை சந்திக்க போலீசார் அனுமதி அளித்து வருகின்றனர். தாங்கள் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியை சார்ந்தவர்கள் என்பதற்கான அடையாள ஆவணங்களை கொடுத்தால் மட்டுமே பொதுமக்களை போலீசார் திருமண மண்டபத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘இதுதான் உண்மையான ஆசிர்வாதம்’- சீக்ரெட் சொல்லும் சாய்பல்லவி
புகார் கொடுத்த ஏழாவது நாளில் சமூக ஆர்வலர் விபத்தில் பலி… சந்தேகம் எழுப்பும் எடப்பாடி, அண்ணாமலை