அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரும் அரசியல் அமைப்பு சாசனத்தை உருவாக்கிய குழுவின் தலைவருமாக அம்பேத்கர் இருந்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்காக அம்பேத்கர் தனது இறுதி காலம் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தவர்.
அவரது பிறந்த நாளான இன்று(ஏப்ரல் 14) பிரதமர் ,குடியரசுத்தலைவர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று (ஏப்ரல் 14) மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என தனது மக்கள் இயக்கத்தின் வாயிலாக நடிகர் விஜய் அறிவுறுத்தினார்.
அதன்பேரில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று இன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டில் உள்ள அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது, வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதேபோல், வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏழை , எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சித்திரைத் திருவிழா: அழகர்கோவில் துணை ஆணையர் ஆய்வு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன்!