தளபதியைப் பார்க்க வெயிட்டிங்: சந்தோசத்தில் மாணவிகள்!
சென்னை நீலாங்கரையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார்.
இந்நிலையில், காலை முதலே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. சென்டருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அப்போது அங்கு வந்த எஸ். கீர்த்தனா என்ற மாணவி பேசுகையில், “ நான் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வருகிறேன். நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 573 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். ஊக்கத்தொகை தருவதாக எங்களை அழைத்ததன் பெயரில் வந்திருக்கிறோம்.
விஜய்யை சந்திப்பது பெருமையாக உள்ளது. எனது தாய் தந்தைக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். கஷ்டப்பட்டுத்தான் படித்தேன் . எல்லாம் நம் முயற்சியில் தான் இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய உமா சங்கரி என்ற மாணவி, ‘கள்ளக் குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியிலிருந்து வந்துள்ளேன். 550 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தளபதியைப் பார்க்க வெயிட்டிங். அம்மா, அப்பா, நான் மூன்று பேரும் வந்துள்ளோம். விஜய்யிடம் பரிசு வாங்க உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“மோடி அமித்ஷா இந்தியாவில் இருக்க மாட்டார்கள்” – ஆ.ராசா
TNPL: குருசாமி அஜிதேஷ் அதிரடி- கடைசி ஓவரில் ட்விஸ்ட்!