தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மாநாட்டுக்கு காவல்துறை தரப்பில் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி கால்கோள் விழா நடைபெற்றது. தொடர்ந்து மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி மாநாடு நடைபெறும் இடத்தை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். மேலும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் அஸ்ரா கார்க் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தநிலையில், மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தவெக தலைவர் விஜய் ஒப்புதலுடன் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அதன்படி, மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு, பொருளாதார குழு, சட்டநிபுணர் குழு, வரவேற்பு குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு, சுகாதார குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு, வாகன நிறுத்த குழு, மகளிர் பாதுகாப்பு குழு, வானிலை தகவல் பகிர்வு குழு, துப்புரவு குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“செல்வத்தின் கொள்கைப் பேனா என்றும் முரசொலிக்கும்” – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
அரசு டாக்டரின் செக்ஸ் டார்ச்சர்: தற்கொலைக்கு முயன்ற நர்ஸின் பகீர் வாக்குமூலம்!