தமிழக வெற்றிக் கழகக் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்ய உள்ளார். இதனையடுத்து கட்சி அலுவலகம் அமைந்துள்ள சென்னை நீலாங்கரையில் நடைபெறும் விழாவில் பங்கேற்குமாறு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் உடனான கூட்டணி குறித்து இப்போதே மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான ஹெச் ராஜாவிடம், விஜய் – பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
திமுக கொள்கைகளை பேசுகிறார்!
அதற்கு அவர், “கூட்டணி குறித்து கடந்த 35 ஆண்டுகளாக நான் பேசியதே இல்லை. கூட்டணியை முடிவு செய்ய வேண்டியது டெல்லி பாஜக தலைமை. விஜயின் வருகையால் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் இதுவரை நீட், ஜல்லிக்கட்டு போன்ற விஷயங்களில் திமுகவின் கொள்கையை பேச கூடியவராக தான் இருந்துள்ளார். அவர் நாளை கொடியை அறிமுகப்படுத்த போகிறார் என்றால் அதற்கு வாழ்த்துகள்” என்றார்.
என்ன சாதிக்க போகிறார்கள்?
தொடர்ந்து அவர், “உதயநிதி விளையாட்டா அமைச்சர் ஆகி இருக்கிறார். அவருக்கு இப்போது துணை முதல்வர் என இன்னொரு லேபிள் ஒட்டுவதால் என்ன சாதிக்க போகிறார்கள்? இதனால் தமிழக நிர்வாகத்தில் ஏதாவது மாற்றம் வரப்போகிறதா? இல்லை என்பது தான் உண்மை. இதெல்லாம் தேவையற்ற விவாதம் தான்” என ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வங்கதேச வன்முறையால் இடம்மாறும் மகளிர் டி20 உலகக்கோப்பை!
”தமிழ் திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் இருக்கு” : சனம் ஷெட்டி பகீர் பேட்டி!