vijay announces his new party tamizhaga vetri kazhagam

தமிழக வெற்றி கழகம்: விஜய் புதிய கட்சி!

அரசியல்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆவண ரீதியான ஏற்பாடுகளை  செய்து வந்தார். கடந்த ஜனவரி 25-ஆம் தேதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையின் போது புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான ஆவணங்களில் கையொப்பம் பெற்றார்.

இந்தநிலையில், விஜய் தனது புதிய கட்சி பெயரை இன்று (பிப்ரவரி 2) அறிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்சி தொடங்கியிருப்பது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய அரசியல் சூழலில் ஊழல் மலிந்துள்ளதாகவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு”, என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“கைது செய்வதுதான் மோடியின் நோக்கம்” : 5ஆவது முறையாக ED சம்மனை புறக்கணித்த கெஜ்ரிவால்

புதிய சேவையை தொடங்கும் பிளிப்கார்ட்…. 20 நகரங்களில் அறிமுகம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0