தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று (ஜனவரி 31) விடை கிடைத்துள்ளது. இன்று வெளியான புதிய நிர்வாகிகள் பட்டியலில் என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஜய். political strategist is John Arokiasamy
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட ஜான் ஆரோக்கியசாமி, ஆப்பிள் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிராண்ட் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பெர்சோனா என்ற நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். political strategist is John Arokiasamy
2016-ஆம் ஆண்டு மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற டேக்லைனை உருவாக்கி பாமக தலைவர் அன்புமணிக்கு அரசியல் வியூகம் வகுத்து கொடுத்தார். அதேபோல, 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கான செயல்திட்டங்களை வகுத்ததில் இருந்து அவருக்கு பக்கபலமாக இருந்து அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் ஜான் ஆரோக்கியசாமி. political strategist is John Arokiasamy

இந்தநிலையில் தான் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதல் ஆடியோவில், தவெக 2 சதவிகித வாக்குகளைக் கூட பெறாது என்றும் விஜய்யை புஸ்ஸி ஆனந்த் மதிக்கவில்லை என்றும் பேசியிருந்தார்.
மற்றொரு ஆடியோவில், தவெகவின் வியூகங்களை புஸ்ஸி ஆனந்த் வெளியே கசியவிடுவதாக தனது ஆதங்கத்தையும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியிருந்தார் ஜான் ஆரோக்கியசாமி.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தான், ஜனவரி 24-ஆம் தேதி பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் விஜய் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளை வெளியே இருக்க சொல்லிவிட்டு தனிப்பட்ட முறையில் மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் விஜய். இந்த கூட்டத்தின் முடிவில் ஜான் ஆரோக்கியசாமியை புதிய மாவட்ட செயலாளர்களுக்கு க்ளோசிங் லெக்சரர் கொடுக்க வைத்தார் விஜய்.

இந்தநிலையில் தான் அண்மையில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைய இருப்பதாகவும், அவர் ஜான் ஆரோக்கியசாமிக்கு பதிலாக விஜய்க்கு அரசியல் ஆலோசகராக செயல்படுவார் என்ற பேச்சுக்கள் எழுந்தது.
இன்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜூனா கட்சியில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி என்று முதல்முறையாக பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், ஆதவ் அர்ஜுனா தனது அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய். political strategist is John Arokiasamy