சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் சமூக செயற்பாட்டாளர் வளர்மதி காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடித்த விடுதலை திரைப்படம் நேற்று (மார்ச் 31) திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்கப்பட்டது.
இந்தநிலையில், சென்னை விருகம்பாகத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் விடுதலை திரைப்படம் பார்ப்பதற்காக 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை அனுமதித்ததாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து திரையரங்கத்திற்கு சென்று 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வெளியில் செல்ல வலியுறுத்தினர்.
அப்போது தியேட்டரில் இருந்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வளர்மதி, “குழந்தைகளுக்கு எந்த படத்தை காட்ட வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரியாதா? ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை அனுமதிக்கவில்லை. சாதி தீண்டாமை தியேட்டருக்குள்ளும் இருக்கிறது.
குழந்தைகள் இந்த படத்தை பார்க்ககூடாது என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்? பொன்னியின் செல்வன் படத்தில் வன்முறை காட்சி இல்லையா மக்களுடைய வலியை காட்டுகிற படம் எடுத்தால் குடும்பத்துடன் பார்த்துவிட கூடாது அது தான் உங்களுடைய பிரச்சனை” என்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவருடன் சேர்ந்து பலரும் காவல்துறையினருடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் படத்தை மீண்டும் திரையிட காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.
செல்வம்
திருவாரூர் ஆழித்தேரோட்டம்: கோலாகலமாக துவங்கியது!
கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட இன்று முதல் கட்டணம்!