முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காலை சுமார் 8.30 மணியளவில் முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வாக்குரிமை பெற்ற அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
அவரிடம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, “நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றிதான்”என கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
திமுக எம்.பி.கனிமொழி, சென்னையில் உள்ள செயிண்ட் எப்பாஸ் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிச்சமயமாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இயந்திரங்களில் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்!
வரிசையில் நின்று வாக்களித்த ஈபிஎஸ்: அன்பை வெளிப்படுத்திய தமிழிசை… பிரேமலதா…