ஆளுநரை சந்தித்த அண்ணாமலை

Published On:

| By Kavi

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துப் பேசினார்.

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் பாஜக மாநில பட்டியல் அணித் தலைவர் தடா பெரியசாமியின் வீடு கார் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தும் இன்று சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

அதுபோன்று சென்னை சிவானந்தா சாலையிலிருந்து போர் வீரர்கள் நினைவிடம் நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ராணுவ வீரர் பிரபு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் பாஜக சார்பில் வழங்கப்படும். அவரின் பிள்ளைகளின் படிப்பு செலவையும் பாஜக ஏற்கும்” என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அண்ணாமலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“முன்னாள் ராணுவ வீரர்கள், தலைவர்களுடன் ஆளுநரைச் சந்தித்து தமிழகத்தில் சீர்குலைந்துள்ள தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை பற்றி மனு அளித்தோம். இவ்விவகாரத்தில் தலையிடக் கோரினோம்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரியா

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை விட்டுப் பிடிக்கும் மோடி… பன்னீருக்கு தொடரும் பாஜக பயம்…  பின்னணி என்ன?

மகளிருக்கான உரிமைத்தொகையை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் உதயநிதி பரப்புரை !

Comments are closed.