சனாதன ஒழிப்பு: உதயநிதியால் காங்கிரஸ் தோல்வியா? – வெங்கடேஷ் பிரசாத் கிளப்பும் புது சர்ச்சை!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால் விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் இன்று (டிசம்பர் 3) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மிசோரம் மாநிலத்தை தவிர மற்ற நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இதில் தெலங்கானாவில் காங்கிரஸ், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால் விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால்  விளைவுகளை ஏற்படுத்தும். மகத்தான வெற்றி பெற்ற பாஜகவிற்கு வாழ்த்துக்கள். பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்திருக்கும் மற்றொரு அற்புதமான வெற்றி. களத்தில் சிறப்பாக பணியாற்றி வெற்றிக்கு வித்திட்ட அனைத்து தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சனாதன விவகாரம் குறித்து பேசினர்.

மேலும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த திரிணாமூல் காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட கட்சிகள் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்தசூழலில் ஐந்து மாநில தேர்தலிலும் சனாதன விவகாரம் எதிரொலித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகளிர் பிரதேசமான மத்திய பிரதேசம்

சத்தீஸ்கர் : 2018ல் விட்டதை 2023ல் பிடித்த பாஜக!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *