velmurugan condemned kudankulam project

கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைப்பதா? – வேல்முருகன் கண்டனம்!

அரசியல்

கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கும் ஒப்பந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மன்துரோவ் முன்னிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பாக சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வல்லரசின் தமிழினப் பகைப் போக்கில் ஒரு முக்கிய நடவடிக்கைதான் கூடங்குளம் அணு உலையாகும்.  தமிழினத்தை தலைமுறை தலை முறையாக அழித்துவிட்டு வட நாட்டு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குறைந்த விலையில் தடையில்லாத மின்சாரத்தை வழங்குவது தான் மத்திய அரசின் திட்டம்.

தற்போது தமிழ்நாடு அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமல், ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல்,  கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைப்பது தொடர்பாக, 26.12.2023 அன்று, இந்தியா – ரஷ்யா நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,  மாஸ்கோவில் நடந்த இந்திய மக்களுடனான கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது, மக்களிடம் உரையாடிய போது, என் முன்னிலையிலும், துணைப் பிரதமர் மன்துரோவ் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

காலநிலை பருவ மாற்றம் குறித்து வாய் கிழிய பேசி வரும் மத்திய அரசு, கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைத்தால் பருவ மாற்றம் சீர்கெடுவது குறித்து சிந்திக்காதது ஏன்?

இது நீண்ட நெடிய வரலாறு கொண்ட மக்கள் வாழும் தமிழ்நாடா? அல்லது மத்திய அரசின் குப்பைத் தொட்டியா?

எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கசிவு கலந்ததற்கும், கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட்  நிறுவனத்தால் வாயுகசிவு ஏற்பட்டதற்குமே, என்ன செய்வதென்று அறியாமல் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர் மக்கள். இந்த நிலையில் கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் வேறு.

இந்திய – ரஷ்யா ஒப்பந்தத்தின் மூலம் புதிய அணுவுலைகளோ அல்லது வர்த்தக ரீதியிலான ஈனுலைகளோ  தொடங்கப்படுவது என்பது சுற்றுச்சூழலுக்கும், மனித சமூகத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே, கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் இரு அணுவுலைகளையும்,  மேலும் 4 உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும் நிறுத்தக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் அணுவுலைகளையும், அணுக்கழிவு மையத்தையும் மேலும் மேலும் அமைக்க முடிவு செய்துள்ளது.  இந்த ஒப்பந்தம் ஜனநாயக விரோதமானது மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.

கூடங்குளம், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், மீத்தேன், எட்டு வழிச்சாலை, ஆகிய விவகாரங்களில் பொதுமக்கள் நலனுக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கும் எதிராகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

மத்திய பாஜக அரசின் நலனுக்காக, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் பலியாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏற்கெனவே, கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிராகப் போராடி பல்வேறு வழக்குகளைச் சந்தித்த உள்ளூர் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் புதிய உலைகளை அப்பகுதியில் அமைக்கும் செய்தி பேரிடியாக விழுந்துள்ளது.

எனவே, தமிழினத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தும் கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகளை தடுத்து நிறுத்துவதோடு, ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் அணுவுலைகளையும் நிரந்தரமாக இழுத்து மூட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அதே நேரத்தில், மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், கூடங்குளம் அணு உலையை இயங்காமல் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு, தமிழ்நாட்டு இளைஞர்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

நெல்லை மேயர் பதவி தப்புமா?: நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு!

இனி என் ரூட்டு இதுதான்… அரசியலில் இறங்கிய முன்னாள் சிஎஸ்கே வீரர்!

விஜயகாந்த் அஞ்சலி… களைப்பு காட்டாத போலீஸ் -காரணம் தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *