சாவர்க்கர் பிறந்தநாளில் திறப்பு விழா: புறக்கணிக்கும் விசிக

அரசியல்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் விசிக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 28ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், குடியரசுத்தலைவர் தான் கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாததை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களும் தெரிவித்து வருகின்றன.

மேலும் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாவர்க்கர் பிறந்தநாளான மே 28ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறக்கவிருக்கிறார் பிரதமர்  மோடி.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை புறக்கணித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை பிரதமர் மோடி நடத்துகிறார். இது சிங்காரித்து மனையில் குந்தவைத்து மூக்கறுக்கிற கதையாகவுள்ளது. 

இதனை விசிக சார்பில் கண்டிக்கிறோம். அத்துடன்,  இந்த நிகழ்வைப் புறக்கணிக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

சிங்கப்பூர் முன்னணி நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை!

குட்கா, பான் மசாலாவுக்கு ஓராண்டு தடை நீட்டிப்பு!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *