2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவிற்கு 25 இடங்கள் வேண்டும் என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய அங்கம் வகிக்கிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் பானை சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து இந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக, இரண்டிலும் வென்று தமிழகத்தில் 5வது மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது.
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை, அதிமுகவின் அழைப்பு காரணமாக வரும் சட்டமன்ற தேர்தலில் விசிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகிறது.
எனினும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உறுதியாக தெரிவித்து வருகிறார்.
இதன் காரணமாக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு இதுதொடர்பாக ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
விசிக அடிமட்ட தொண்டனின் ஆசை இதுதான்!
அதில், “இந்தியாவில் தற்போது சனாதனத்திற்கு எதிராக அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளை பாதுகாத்து வலிமையாக இயங்கி கொண்டிருக்கிறது விசிக. தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாத்து வருகிறது.
எனவே குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் விசிக சட்டமன்றத்தில் இடம்பெற வேண்டும். அதற்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் இருந்து குறைந்தது 25 தொகுதிகளாக கேட்டு பெற வேண்டும் என்பது தான் விசிகவின் அடிமட்ட தொண்டனின் ஆசையாக உள்ளது.
விரும்பும் எண்ணிக்கையில் தொகுதிகளை திருமாவளவன் கேட்டு பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
அரசு ஊழியரின் சொத்துக்களும், கடன்களும் தனிப்பட்ட விவரங்கள் அல்ல : உயர்நீதிமன்றம்
மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதியாம்… பாஜக அரசு மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு!
தத்துவம் இல்லா தலைவர்கள்… விடுதலை 2 திரைப்படம் குறித்து திருமா பேச்சு!