ஆளுநர் மாளிகை முற்றுகை: விசிக அறிவிப்பு

அரசியல்

ஜனவரி 13-ஆம் தேதி விசிக சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 9) காலை ஆளுநர் உரையுடன் துவங்கியது.

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்கும் போது திராவிட மாடல் ஆட்சி, பெரியார், அண்ணா, கலைஞர் பெயர்களை வாசிக்கவில்லை.

இதனால் ஆளுநர் ரவி உரையை முடித்ததும் முதல்வர் ஸ்டாலின் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று கூறினார்.

இதனை தொடந்து ஆளுநர் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாக வெளியேறினார். அவரது இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாக பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ரவியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசிய கீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை.

எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

பாரதி வரிகளை கூறி உரையை முடித்த ஆளுநர்!

“மரபை மீறிவிட்டார் முதல்வர்”: எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *