வாரணாசி மக்களவை தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18ஆவது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக களமிறங்கினார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அதன் மாநிலத் தலைவர் அஜய் ராய், பி.எஸ்.பி. சார்பில் ஏ. ஜமால் ஆகியோரும் போட்டியில் இருந்தனர்.
இந்த நிலையில், வாரணாசி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் பிரதமர் மோடி தொடர் பின்னடைவைச் சந்தித்து வந்தார்.
முதல் 4 சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் முன்னிலையில் இருந்தார். அவர் தொடர்ந்து மோடிக்கு கடும் போட்டி அளித்து வந்த நிலையில் 5வது சுற்றில் மோடி முன்னிலை பெற்றுள்ளார்.
காலை 10.30 மணி நிலவரப்படி மோடி 63, 223 வாக்குகள் பெற்று, காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை (46075) விட 17,148 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இந்திய அளவில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 294 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 220 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விருதுநகர், கரூர், கள்ளக்குறிச்சி… அதிமுக கடும் போட்டி!
20/39 – திமுக கூட்டணி முன்னிலை … தற்போதைய நிலவரம்!