”எடப்பாடி பழனிசாமி பெயர் சொல்வதற்கு கூட தகுதியில்லாத திமுகவில் உள்ள கத்துக்குட்டிகள் சிலர் இன்றைக்கு மத்திய அரசிடம் நிதி வாங்குவதற்கு நம்மை அழைத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று வளர்மதி பேசினார். Vanishing cubs are called edappadi
இன்னும் நான்கு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 26) கூடி உள்ளது.
அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி முதலில் பேசினார்.
அப்போது ஆளும் கட்சியான திமுக அரசு, அதன் தலைவர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், “கண் தெரியாதவனுக்கு கமலக்கண்ணன், நாக்கு தடுமாறுகிறவனுக்கு நாவுக்கரசன் என்று பெயர் வைத்தது போல, ஆட்சி, அரசு நடைமுறைகள் பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தெரிந்த ஒரே நிர்வாகம் எங்கு பணம் எடுப்பது, அதை யாரிடம் எப்படி கொடுப்பது போன்ற தரகு வேலை பார்ப்பது மட்டும் தான்.
கொள்ளையடித்த பணம் துபாயில் வெள்ளையாகி கொண்டிருக்கிறது. இது தான் விஞ்ஞான ஊழல் என்பார்கள்.
குங்கும பொட்டோடும், கும்பிட்ட கையோடும் உறவாட வந்து பகையாடிய துரோகிகளை தோலுரித்து தொங்கவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிசாமி.
கசாப்புக்கடைக்காரன் காந்தியம் பேசுவது போல, இந்த அதர்ம வாதிகள் எல்லாம் தர்மயுத்தம் பற்றி பேசி வருகிறார்கள்.
ஆக்கிரமிப்பு செய்த அமெரிக்காவை எதிர்த்து நீண்ட விடுதலை போரிட்டது வியட்நாம் நாடு. அப்போது ஒரு கவிஞன் பாடினான்,
“நம்முடைய தேரின் நீண்ட பீடம் தளபதிக்காக காத்து கொண்டிருக்கிறது’ என்று அதேபோலத்தான் தமிழ்நாட்டின் அரசு பீடமும், நாற்காலியும் எடப்பாடி பழனிசாமிக்கு காத்து கொண்டிருக்கிறது.
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை சரியாக கையாள முடியாத அரசால் மக்கள் திமுக அரசு மீது வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள். இன்றைக்கு மத்திய அரசிடம் நிதி வாங்குவதற்கு நீங்களும் வாருங்கள் என்று திமுகவில் உள்ள கத்துக்குட்டிகள் சிலர் அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அன்று அரிசி கேட்டு எம்.ஜி.ஆரும், காவிரி நதிநீர் கேட்டு ஜெயலலிதாவும் கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக யார் வந்தார்கள்?
இப்படி ஆட்சி செய்ய முடியாமல் தவித்து வரும் திமுகவை எதிர்த்து, வரும் அனைத்து தேர்தல்களிலும் வென்று எடப்பாடி பழனிசாமியை ஆட்சி கட்டிலில் அமர்த்த சபதம் ஏற்போம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உயரும் பலி எண்ணிக்கை: சீனாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை… காரணம் என்ன?
Vanishing cubs are called edappadi