முன்னாள் அமைச்சரும் ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளருமான வைத்திலிங்கம் இன்று (மே 29) அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்துப் பேசியுள்ளார்.
அதிமுகவில் இருக்கும் அணிகளை விரைவில் ஒன்றிணைத்து விடுவேன் என்று சசிகலா தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் தற்போது அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு உடன்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் நடத்திய மாநாட்டைத் தொடர்ந்து… சமீபத்தில் டிடிவி தினகரனை பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சந்தித்து பேசினார் ஓ. பன்னீர்செல்வம்.
இந்தப் பின்னணியில் இன்று மே 29ஆம் தேதி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்திற்கு மாலை ஏழு மணி அளவில் சென்றார்.
வரும் ஜூன் 7 ஆம் தேதி தஞ்சாவூரில் வைத்தியலிங்கத்தின் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் அளிக்கத்தான் தினகரனை சந்தித்திருக்கிறார் வைத்திலிங்கம்.
அழைப்பிதழில் ஜெயலலிதாவுடன் ஓ. பன்னீர்செல்வம் இருக்கும் படம், வைத்திலிங்கம் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஓபிஎஸ் அணி ஆதரவு நிர்வாகிகள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இன்று தினகரனை சந்தித்து திருமண அழைப்பிதழ் அளித்த வைத்திலிங்கம், நாளை திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சசிகலாவை சந்திக்க இருக்கிறார்.
திருச்சி மாநாட்டுக்கு சசிகலா, தினகரன் ஆகியோர் வருவார்களா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த சூழலில் வரும் ஜூன் 7-ம் தேதி தஞ்சையில் நடைபெற இருக்கும் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில்… சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய மூவரும் ஒன்றாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேந்தன்
விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன்!
“மீண்டும் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்குவேன்”: கவாஸ்கர்