மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாக அவரது மகனும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லைக்கு சென்றிருந்த போது, அங்குள்ள வீட்டில் தவறி விழுந்து வைகோவுக்கு இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அங்கு முதல்கட்ட சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், சென்னை வந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று (மே 29) காலை அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பிளேட் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக துரை வைகோ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவர், நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அவரது இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தது. அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருக்கிறார்கள். நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, கட்சியினரும், நலம் விரும்பிகளும் தலைவரை சந்திக்க வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜாமீனை நீட்டிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் : மீண்டும் திகார் செல்லும் கெஜ்ரிவால்?
அண்ணா… நோ கமெண்ட்ஸ்… : இசையா? பாடலா? குறித்த கேள்விக்கு ரஜினி பதில்!