தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக இன்று (பிப்ரவரி 13) உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் இந்திய – இலங்கை அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.
இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று (13.02.2023) தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து வெளியிட்டுள்ளார்.
தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர்.
என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை.
ஆனாலும் அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
அதானி குழும முறைகேடு : நிபுணர் குழு அமைக்க ஒப்புதல்!
பிரபாகரன் உயிரோடு வந்தால்… சீமான் பதில்!