மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் இன்று (நவம்பர் 14) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்காக கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்றுவதற்காக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அவர் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என வைகோவின் மகனும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கஸ்தூரி முன் ஜாமீன் மனு தள்ளுபடி!
’இஸ்ரேலியரா? கடையை விட்டு இறங்குங்கள்’ : தேக்கடியில் காஷ்மீர் வியாபாரிகள் செய்த காரியம்!