அமெரிக்கா நாட்டின் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 6) அதிகாலை தொடங்கிய நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது. இதனையடுத்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
அதன்படி தேர்தலில் போட்டியிட்டுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், கமலா ஹாரிஸை விட ட்ரம்ப், சுமார் 120 எலெக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 99 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார்
இதுவரை 20 மாகாணங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விரிஜினியா ஆகிய மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா ஆகியவற்றை வசப்படுத்தியுள்ள அவர் இதுவரை 99 எலெக்டோரல் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 லெக்டோரல் வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.
இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் 270-ஐ எட்டுவதற்கான போட்டியில் சுமார் 120 எலெக்டோரல் வாக்குகளைப் பெற்றுள்ளது அவரது கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஏசியிலிருந்து வெளியான கழிவுநீரை தீர்த்தம் எனக் குடித்த பக்தர்கள் : நிர்வாகம் அளித்த ஷாக் பதில்!
ஹெல்த் டிப்ஸ்: இரவு படுக்கைக்குச் செல்லும் முன் டீ, காபி குடிப்பவரா நீங்கள்?