அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வர உள்ளதாக அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவுக்கு வருகிறார். செப்டம்பர் 10ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின் நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ, “செப்டம்பர் மாதம் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி ஜோ பைடன் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் இந்தியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். அடுத்த சில மாதங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அதிபர் ஜோ பைடன் கூறியது நினைவுகூரத்தக்கது.
ராஜ்
WI vs IND: சொதப்பிய இந்திய அணி: வெஸ்ட் இண்டீஸ் அபாரம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!