சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவியாளராக செயல்பட்டு வந்த அல் சூடானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 30 பேரை அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து வரும் அல்-சூடானி, ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே பயங்கரவாத பிரிவு மற்றும் ஐ.எஸ் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
சோமாலியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான அல்-ஷபாப் தீவிரவாத அமைப்புடன் அல்-சூடானி பணியாற்றி வந்தார்.
இவர் வெளிநாட்டு தீவிரவாதிகள் அல்-ஷபாப் பயிற்சி முகாமிற்கு செல்ல உதவினார் மற்றும்,
சோமாலியாவில் வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வந்தார் என்று அமெரிக்க ராணுவம் இவர் மீது குற்றம் சாட்டியது.
இந்தநிலையில், கடந்த ஜனவரி 25-ஆம் தேதி சோமாலியாவில் உள்ள மலைப்பாங்கான குகை வளாகத்தில் உலகளாவிய பயங்கரவாத அமைப்பின் முக்கிய நிதி உதவியாளரான அல் சூடானி மற்றும் அவரது ஆதரவாளர்களை குறிவைத்து அமெரிக்க சிறப்பு படை தாக்குதல் நடத்தியது.
இதில் அல் சூடானி உள்பட 30 அல் ஷபாப் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பல மாத திட்டமிடலுக்கு பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஸ்டின் மற்றும் இராணுவ ஜெனரல் மார்க் மில்லியின் பரிந்துரையைத் தொடர்ந்து அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் அல் சூடானி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கி உள்ளார்.
இந்த நடவடிக்கையானது அமெரிக்காவையும் அதன் ஆதரவு நாடுகளையும் பாதுகாக்க உதவுகிறது.
மேலும், இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்கான உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
செல்வம்
அரோகரா… அரோகரா… : 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் குடமுழுக்கு!
முக்கால் மணி நேரம் விமானத்திலேயே வட்டமடித்த தமிழிசை